
சென்னை வியசர்பாடி கன்னிகாபுரத்தை சேர்ந்த இளைஞர் கலையரசன். தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த இவர் மொபைலில் பெண் வேடமிட்டு மியூசிக்லி செய்து வெளியிட்டுள்ளார். மேலும் அதே ஆப்பை பயன்பபடுத்தி பல சினிமா பாடல்களுக்கும் பெண்கள் போல வேடமிட்டு மியூசிக்லி செய்து வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

கலையரசன் பெண் வேடமிட்டு மியூசிக்கலி செய்து வெளியிடுவதை நண்பர்கள் தொடர்ந்து கேலி செய்து வந்துள்ளனர். ஆனால் கேலி ஒரு கட்டத்தில்உச்சிக்கு செல்ல மனமுடைந்து இறுதியில்பொறுத்துக்கொள்ள முடியாத கலையரசன் கடந்த 12-ஆம் தேதிமின்சார ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
இப்படி கேலி கிண்டலுக்கு ஆளாகி இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us