/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/250_1.jpg)
தாய் வீட்டில் இருந்த மனைவியிடம் வீடியோ காலில் பேசியப்படியே கணவன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
மத்தியப்பிரதேசம் மாநிலம், இந்தூரில் ரஞ்சித் என்பவர் கார் ஓட்டுநராக உள்ளார். மனைவியுடன் அவர் வசித்து வந்த நிலையில் இருவருக்கும் அவ்வப்போது குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ரஞ்சித்திடம் கோவித்துக்கொண்ட அவரது மனைவி தனது தயார் வீட்டுக்கு சென்றுவிட்டார். தனக்கும் மனைவிக்கும் தகராறு என்று மாமியார் வீட்டுக்கு தெரிந்தால்அசிங்கம் என நினைத்த ரஞ்சித், மனைவியிடம் போனில் பேசி வீட்டுக்கு திரும்ப வருமாறு அழைத்துள்ளார்.
இரண்டு தினங்களாக போனில் பேசிய அவர், அதனைத் தொடர்ந்து வீடியோ காலில் பேசியுள்ளார். அப்போது, ஏன் இப்படி செஞ்ச, நமக்குள் தகராறு என்றால் உங்க வீட்டில் தப்பா நினைக்க மாட்டாங்களா என்று உருக்கமாக பேசியுள்ளார்.
அப்போது போனை ஒரு இடத்தில் வைத்த ரஞ்சித், திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை வீடியோ காலில் பார்த்துஅதிர்ச்சியடைந்த அவரது மனைவி கதறினார்.
பின்னர் ரஞ்சித் மனைவி மற்றும் அவரது பெற்றோர் போலீசுக்கு தகவல் சொல்லிவிட்டு ரஞ்சித் வீட்டுக்கு சென்றனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரஞ்சித்தின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் நடந்த சம்பவம் குறித்துரஞ்சித் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)