Suicide

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் சுதாகர். 35 வயதான இவர் கேரளாவிற்கு சென்று காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். சுதாகருக்கும், ஆலங்குளம் பரம்பு பகுதியை சேர்ந்த தன்னைவிட வயதில் மூத்தவரான பொன்ஏஞ்சல் (வயது 45) என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. பொன்ஏஞ்சலுக்கும் திருமணம் ஆகி 3 மகன்கள் உள்ளனர்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

பொன்ஏஞ்சலுடன் தனது கணவரக்கு தொடர்பு உள்ளது தெரியவந்ததும், சுதாகரை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதேபோல் பொன்ஏஞ்சல் நடத்தையில் சந்தேகப்பட்டு, அதனை கண்டுபிடித்த அவரது கணவர், நமக்கு 3 குழந்தைகள் இருக்கிறது. சுதாகரன் வயதில் சின்னவன், அதோடு அவனுக்கும் 2 குழந்தைகள் உள்ளது. இனி அவனை நீ சந்திக்கக் கூடாது என்று கண்டித்துள்ளார்.

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

இருப்பினும் அவர்களது தொடர்பு நீடித்தது. இதற்கு அவர்கள் இருவீட்டிலும் கடும் எதிர்ப்பு வந்தது. இதையடுத்து இருவரும் திடீரென கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினர். கடந்த 20ந் தேதி குற்றாலத்தில் அறை எடுத்து தங்கி இருவரும் அங்கு வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தனர். இதையடுத்து போலீசாருக்கு விடுதி ஊழியர்கள் குற்றாலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

Advertisment

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

பின்னர் அவர்கள் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி பொன்ஏஞ்சல் பரிதாபமாக இறந்தார். அங்கிருந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சுதாகரை மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுதாகர் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.