sugar

Advertisment

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த புத்தேரி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் ஆனந்தி(12). அருகில் தொளார் அரசு பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்தார். மதிய சாப்பாட்டிற்கு வீட்டிற்கு வந்து மீண்டும் தோழிகளோடு பள்ளிக்கு செல்லும் போது ஆதமங்கலத்திலிருந்து பெரம்பலூர் தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றி சென்ற டிராக்டர் ஆனந்தியின் மீது மோதியதில் தலை நசுங்கி பலியானார்.

சத்தியவாடியை சேர்ந்த டிராக்டர் டிரைவர் முத்தையனை ஆவினங்குடி போலீசார் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.