தமிழர் திருநாள் தைப்பொங்கல் தமிழகம் முழுக்க கிராமப் புறத்திலிருந்து நகர் பகுதி வரை மக்களால் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் தமிழர்களின் பண்டிகையாகும். தைப்பொங்கலுக்கு அடுத்த நாள் உழவர் திருநாள் ஆகும். இந்த நாளில் வாசலில் பொங்கல் வைப்பதும் விவசாய பணிகளில் ஈடுபடும் கால்நடைகளை குளிப்பாட்டி மாடுகளின் கொம்புகளில் வர்ணம் அடித்து சிறப்பு செய்வார்கள்.

 'Sugarcane' harvested for Pongal 'Sugarcane' harvested for Pongal

Advertisment

Advertisment

அதோடு பொங்கலின் மிக முக்கியமான பொருள் என்றால் அது செங்கரும்பு இந்த செங்கரும்பு இல்லாத இல்லங்களே இருக்காது. பொங்கலுக்கு முன்கூட்டியே செங்கரும்பு அறுவடை தொடங்கி விட்டது ஈரோட்டில். ஈரோடு வைரம்பாளையம், கணபதிபாளையம், சோழங்க பாளையம் போன்ற பகுதிகளில் விவசாயிகள் விளைவித்த செங்கரும்பு அறுவடை செய்யத் தொடங்கி விட்டார்கள். இந்த செங்கரும்பு பல்வேறு மாவட்டங்களில் மக்களுக்காக விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.