Advertisment

வாக்கு இயந்திரத்தில் தெளிவற்ற நிலையில் ''கரும்பு விவசாயி'' சின்னம்:உச்சநீதிமன்றத்தில் நாம் தமிழர் மனு

நாம் தமிழர் கட்சியின் சின்னமான கரும்பு விவசாயி சின்னம்வாக்குப்பதிவு இயந்திரத்தில் தெளிவாகஇல்லை, எனவே வாக்குபதிவு இயந்திரத்தில் தெளிவாகசின்னத்தைப் பதியக்கோரி உச்சநீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

court

நடக்கயிருக்கின்ற 17 வதுநாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தமிழகத்தில்தனித்துப் போட்டியிடுகிற நிலையில், வாக்குப்பதிவு இயந்திரத்தில் நாம் தமிழர் கட்சியின் சின்னமான ''கரும்பு விவசாயி'' சின்னம் மற்ற சின்னங்களை போல் அல்லாமல் தெளிவாக இல்லாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

Advertisment

court

ஏற்கனவே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்சீமான், மற்ற கட்சிகளின் சின்னங்கள் தெளிவாக பதிவிடப்பட்டுள்ள நிலையில் எங்கள் சின்னம் மட்டும் ஏன் தெளிவாக இல்லாமல் இருக்கிறது. காளை சின்னத்தையும் மயில் சின்னத்தையும் தரமாட்டோம் என கூறிய தேர்தல் ஆணையம் உயிருள்ளவைகளை சின்னமாக ஒதுக்கமுடியாது என கூறியது. ஆனால் இறுதியில் கொடுக்கப்பட்டசின்னம் கரும்பு விவசாயி. அப்பொழுது விவசாயி இறந்துவிட்டானா. மேலும் ஒதுக்கப்பட்ட சின்னம் வாக்கு இயந்திரத்தில் மற்ற சின்னங்களை விட தெளிவற்ற நிலையில் அச்சிட்டிடுருப்பது ஒருவிதம் துரோகம் இதற்காக கண்டிப்பாக வழக்கு தொடர்வோம் என கூறியிருந்தார்.

இந்நிலையில்வாக்குப்பதிவு இயந்திரத்தில்தெளிவான சின்னத்தை பதிய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரி நாம் தமிழர் கட்சி சார்பாகஉச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

elections karumpu vivasayi naam tamilar Naam Tamilar Katchi seeman supremecourt vellaporan vivasayi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe