Advertisment

தமிழகத்தின் பல பகுதிகளுக்கு ஏற்றுமதியாகும் சிதம்பரம் பன்னீர் கரும்புகள்

s

Advertisment

கடலூர் மாவட்டம், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், ஸ்ரீமுஷ்ணம் வட்டங்களில் விளைந்த பன்னீர் கரும்புகளை பொங்கலையொட்டி அறுவடை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தமிழர் திருநாளாக போற்றப்படும் பொங்கல் பண்டிகை தமிழகத்தில் 14-ம் தேதி முதல் தொடர்ந்து நான்கு நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதே பண்டிகையை வடமாநிலங்களில் சங்காரந்தி என்ற பெயரில் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது கரும்புகள் தான்.

பொங்கலுக்கு அனைவரும் விரும்பி சாப்பிடும் பன்னீர் கரும்பு காவிரி டெல்டாவின் கடைமடை பகுதியாக விளங்கும் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் பயிரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிதம்பரம் அருகே உள்ள சாலியன்தோப்பு, கடவாச்சேரி, வல்லம்படுகை, அகரநல்லூர், பழையநல்லூர், பெராம்பட்டு, வேளக்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கரும்பு அறுவடை செய்து தமிழகத்தின் பல பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Advertisment

தமிழக அரசு நியவிலைகடைகளில் பொங்கல் பரிசாக கரும்பு அறிவிக்கப்பட்டது. இதற்காக கரும்புகளை கொள்முதல் செய்வதற்கு கூட்டுறவு துறை அதிகாரிகள் கரும்பு பயிரிடப்பட்டுள்ள பகுதிகளுக்கு வந்து கொள்முதல் செய்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வருகிறார்கள். மேலும் சென்னை ,சேலம், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் நேரடியாக கரும்பு விளைந்துள்ள வயல்களுக்கு வந்து கொள்முதல் செய்து லாரியில் ஏற்றி செல்கின்றனர். 20 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ. 350 முதல் 400 வரை கொள்முதல் செய்யப்படுகின்றன. இது போல சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார்கோவில்,ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட கிராமபகுதிகளில் பன்னீர் கரும்பு அறுவடை தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

sugarcane
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe