
திருவண்ணாமலை அருகே சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்ததில் வாகனம் முழுவதும் தீக்கிரையானது. இந்த சம்பவத்தில் வாகனத்தை ஓட்டி வந்த நபர் மற்றும் அவரது மனைவிஇருவரும்அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ளது மத்துவாம்பாடி கிராமம். அந்தப் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனமானது திடீரென தீப்பற்றியது. அந்த வாகனத்தைக் கட்டடத்தொழிலாளியான பாஸ்கர் ஓட்டி வந்து நிலையில் பின்புறம் அவரது மனைவி அமர்ந்திருந்தார். திடீரென இருசக்கர வாகனத்திலிருந்து கரும்புகை வெளியேறியுள்ளது. உடனடியாக வாகனத்தை நிறுத்திய பாஸ்கர் மனைவியை வண்டியை விட்டு இறங்கச் சொல்லியுள்ளார் . உடனே இருவரும் இறங்கிக் கொண்ட நிலையில் தொடர்ந்து வாகனமானது மளமளவெனதீப்பற்றி எரிந்தது. இது தொடர்பாக வந்தவாசி தீயணைப்புத் துறையினருக்குத்தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இதில் இரு சக்கர வாகனமானது முழுவதும் எரிந்து சேதமானது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)