/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a7092.jpg)
அரசு பேருந்து முகப்பு கண்ணாடி திடீரென வெடித்துச் சிதறியதில் பேருந்து ஓட்டுநரும் பயணிகள் சிலரும் காயமடைந்த சம்பவம் ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று ராஜபாளையத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் பலர் பயணித்துக் கொண்டிருந்தனர்.ராமநாதபுரம் லாந்தை என்ற இடத்தில் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பேருந்தின் முன்பக்க கண்ணாடி வெடித்துச் சிதறியது. இதில் பேருந்தின் ஓட்டுநர் முகத்தில் பட்டு காயம் ஏற்பட்டுரத்தம் கொட்டியது. அதேபோல் பேருந்தில் முன்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த பெண் ஒருவரும்மயக்கம் அடைந்தார். இதனையடுத்துஉடனடியாக பேருந்து ஓரம் கட்டப்பட்டு அதிலிருந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக கீழே இறக்கப்பட்டனர்.
தானாகவே திடீரென பேருந்தின் முகப்பு கண்ணாடி உடைந்து அதில் இருவர் காயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)