Advertisment

திடீரென வெடித்துச் சிதறிய சிலிண்டர்; நூலிழையில் தப்பிய இளைஞர்

A suddenly burst cylinder; A young man who survived the massacre

Advertisment

சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி அருகே நடு சாலையில் மினி லாரியில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டர் வெடித்தது தொடர்பான பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சேலம் மாவட்டம் ஓமலூரில் இருந்து சங்ககிரி வரை நான்கு வழிச்சாலை திட்டம் தொடங்கி பணிகள் நடைபெற்று வருகிறது.சுமார் 90 சதவீதம் பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது மீதம் இருக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சின்னப்பம்பட்டி பகுதியில் சாலையில் தார் ஊற்றும் பணி நடைபெற்று முடிந்தது. வெள்ளை கோடுகள் போடும் பணி நடைபெற்று வந்தது. வெள்ளைக் கோடு வரைய பயன்படுத்தப்படும் இயந்திரம் மற்றும் சிலிண்டருடன் லாரி நின்று கொண்டிருந்தது. திடீரென எதிர்பாராத விதமாக இந்த சிலிண்டர் வெடித்து சிதறியது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதில் நூலிழையில் இளைஞர் ஒருவர் தப்பித்த அந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Road omalur Salem
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe