
தமிழகத்தில் வாக்காளர் திருத்தப் பட்டியலில் முறைகேடு நடந்திருப்பதாக தி.மு.கவை சேர்ந்த செந்தில்பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் தலைமைத் தேர்தல் ஆணையமும், தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியும் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூரில், திடீரென 30 ஆயிரம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், வாக்காளர்களின் விண்ணப்பம் போக்குவரத்து அமைச்சர் அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்படுகிறது எனவும் தி.மு.க எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி வழக்குத் தொடுத்திருந்தார். இந்த வழக்கில், வரைவு வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்துள்ளதா எனப் பதிலளிக்க உத்தரவிட்டு, தலைமைத் தேர்தல் ஆணையதிற்கும், தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.