தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 90 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி இரண்டு சீசன்களை கடந்து தற்போது மூன்றாவது சீசன் நடைபெற்று கொண்டிருக்கிறது. இரண்டு சீசன்களை போலவே மூன்றாவது சீசனும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் சேரன் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியேற்றப்பட்டிருந்த நிலையில் சீக்ரட் ரூம்வழியாக மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். இதனால் அவர் நிகழ்ச்சியின் இறுதிவரை பிக்பாஸ் வீட்டில்இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அவர் இன்றைய வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து மீண்டும் வெளியேற்றப்பட்டிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.