Skip to main content

நூடுல்ஸ் சாப்பிட்ட குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் திடீர் திருப்பம்... விசாரணை வளையத்தில் பெற்றோர்!

Published on 20/06/2022 | Edited on 20/06/2022

 

Sudden turn in the incident where a child who ate noodles... Police are investigating the parents!

 

திருச்சியில் நூடுல்ஸ் சாப்பிட்ட குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த சம்பவத்தில் போலீசாரின் பார்வை பெற்றோர் மீது தற்போது திரும்பியுள்ளது.

 

திருச்சி மாவட்டம் தாளக்குடியை சேர்ந்த சாய்தருண் என்ற 2 வயது குழந்தைக்கு சிலநாட்களுக்கு முன்பு உடலில் அலர்ஜி ஏற்பட்டதால் பெற்றோர்கள் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சையளித்தனர். அதனைத்தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு சாய்தருணுக்கு அவரது தாய் நூடுல்ஸ் சமைத்து கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அதேபோல் அடுத்தநாள் காலையிலும் ஃபிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த நூடுல்சை தாய் குழந்தைக்கு சாப்பிட கொடுத்ததாகக் கூறப்படும் நிலையில், மாலை நேரத்தில் மிகவும் சோர்வாக காணப்பட்ட குழந்தை வாந்தி எடுத்ததுடன் மயங்கி விழுந்தது. அதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

இது குறித்து திருச்சி கொள்ளிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ஏற்கனவே உடல் அலர்ஜியால் பாதிக்கப்பட்டிருந்த குழந்தைக்கு துரித உணவான நூடுல்சை கொடுத்ததால் ஃபுட் பாய்சன் ஏற்பட்டு குழந்தை இறந்து இருக்கலாம் என சந்தேகித்திருந்தனர். இருப்பினும் குழந்தையின் பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காகக் காத்திருந்தனர் காவல் துறையினர். இதில் குழந்தையின் விலா எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளதும், உடலில் காயங்கள் இருப்பதும், குறிப்பாக சிறுநீர் கழிக்கும் இடத்தில் காயம் இருந்ததும் தெரியவர, இந்த சம்பவத்தில் அதிரடி திருப்பமாக குழந்தையின் பெற்றோரான சேகர்- மகாலட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காதலன் முகத்தில் ஆசிட் அடித்த காதலி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Girlfriend threw toilet cleaning liquid on her boyfriend face

உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் சிகிடாவுனி கிராமத்தை சேர்ந்தவர்  ராகேஷ் பிந்த்(26). இவரும் அதைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராகேஷ் பிந்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அப்போது  கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தோடு(ஆசிட்)  நிச்சயதார்த்தம் நடக்கும் இடத்திற்கு வந்த லட்சுமி தனது கையில் வைத்திருந்த திரவத்தை ராகேஷ் பிந்து முகத்தில் வீசினார். இதில் அவர் முகம் மற்றும் உடலில் உள்ள சில இடங்களில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதனிடையே அங்கிருந்தவர்கள் லட்சுமியைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தன்னைக் காதலித்து விட்டு வேறொரு பெண்ணை நிச்சயதார்த்தம் செய்ததால் திரவத்தை வீசியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து லட்சுமியைக் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

திரவ நைட்ரஜன் உணவுப் பொருள்; உணவு பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
liquid nitrogen foodstuff; Food Safety Department action order

திரவ நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுகளை விற்க கூடாது என உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் துடிதுடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் நைட்ரஜன் பிஸ்கட்டுக்கு எதிராக பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோ ஒன்றில் நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்தான். இது தொடர்பான தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில் திரவ நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுப் பொருள் விற்கக் கூடாது என தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. திரவ நைட்ரஜன் உணவுப்பொருள் விற்கப்படுகிறதா என ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் குழந்தைகளுக்கு நைட்ரஜன் ஐஸ் கலந்த எந்தவொரு உணவு பொருள்களையும் கொடுக்கக் கூடாது எனவும், உணவு விடுதிகளில் நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுப் பொருள்களை விற்பனை செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.