Advertisment

திடீர் திருட்டு புகார்... திரும்பப்பெற்ற நடிகை நிக்கி கல்ராணி!

Sudden theft complaint ... Retired actress Nikki Kalrani!

திரைப்பட நடிகை நிக்கி கல்ராணி அவரது வீட்டில் திருட்டு நடந்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில் புகாரைத் திரும்பப் பெற்றுள்ளார்.

Advertisment

சென்னை அண்ணாசாலையில் கிளப் ஹவுஸ் சாலையில் வசிக்கும் திரைப்பட நடிகை நிக்கி கல்ராணி தனது வீட்டில் வேலை செய்து வந்த தனுஷ் என்பவர் தன்னுடைய கேமரா, உடைகள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களைத் திருடிச் சென்றதாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வந்த நிலையில், தனுஷை நிக்கிகல்ராணி சட்டவிரோதமாக அடைத்து வைத்திருப்பதாகவும் அவரை மீட்டுத் தரவேண்டும் என தனுஷின் பெற்றோர்அதே காவல் நிலையத்தில் நிக்கிகல்ராணி எதிராக புகார் அளித்தனர்.

Advertisment

இதுதொடர்பாக போலீசார் நடிகை நிக்கி கல்ராணியின் வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்தபோது குற்றம் சாட்டப்பட்ட நபர் வீட்டிலிருந்த பொருட்களை எடுத்துச் செல்வது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் திருப்பூர் பகுதியில் இருந்த தனுஷ் பிடிபட்டார். மேலும் திருடியதை ஒப்புக் கொண்ட தனுஷ் பொருட்களைத் திரும்ப கொடுத்துள்ளார். அதனையடுத்து தான் கொடுத்த புகாரை நிக்கிகல்ராணி திரும்பப் பெற்றார். இதனால் போலீசார் அந்த நபரை எச்சரித்து அனுப்பினர்.

police vck
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe