திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு பெரிய பள்ளிவாசல் சிறிய பள்ளிவாசல் மற்றும் எஸ்.எம்.ஏ தொழுகை மைதானத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன.

இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர் தொழுகை முடிவில் ஒருவருக்கொருவர் தழுவி புனித ரமலான் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். வத்தலகுண்டில் ரம்ஜான் ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கப்படவில்லை இதனால் தொழுகை நடைபெறும் அனைத்து இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


இந்நிலையில் எஸ்எம்ஏ தொழுகை மைதானத்திலிருந்து சிறப்பு தொழுகை முடிந்ததும் ஏராளமான இஸ்லாம் இளைஞர்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் எஸ்டிசிஏ, பாப்புலர் பிரான்ஸ் ஆப் இந்தியா அமைப்பினர் மற்றும் இஸ்லாமிய பொதுமக்கள் திடீரென ஊர்வலமாக சென்றனர். கெங்குவார்பட்டிசாலை பெரியகுளம் சாலை மற்றும் வத்தலகுண்டு மெயின்ரோடு வழியாக ஊர்வலமாக வந்த இஸ்லாமிய இளைஞர்களை பெரிய பள்ளிவாசல் அருகே தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களை மேலும் செல்ல விடாமல் பெரிய பள்ளிவாசலுக்குள் அனுப்பி வைத்தனர்.

அங்கு சிறிய தொழுகைக்கு பின் அனைவரும் கலைந்து சென்றனர் இதனால் வத்தலகுண்டில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.