Advertisment

திருச்சி உட்பட தமிழ்நாடு மத்திய சிறைகளில் திடீர் ரெய்டு..!

Sudden raid on Tamil Nadu Central Jails including Trichy ..!

Advertisment

தமிழ்நாட்டில் உள்ள மத்திய சிறைகளில் தடை செய்யப்பட்ட பொருட்கள் புழங்குவதாக வந்த ரகசிய தகவலை அடுத்து, போலீசார் இன்று (06.08.2021) ஒரே நேரத்தில் பல்வேறு சிறைகளில் அதிரடியாக சோதனை நடத்திவருகின்றனர்.

அந்த வகையில் திருச்சி, மத்திய சிறைச்சாலையில் நீதிமன்றக் காவல், தண்டனைக் கைதிகள், இலங்கைத் தமிழர் உள்ளிட்ட வெளிநாட்டினர் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறைவாசிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைக்குள் கஞ்சா மற்றும் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் புழங்குவதாகவும், செல்ஃபோன் உபயோகம் இருப்பதாகவும், போலீசாருக்கு சந்தேகம் ஏற்படவே இன்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

கண்டோன்மென்ட் உதவி கமிஷனர் தலைமையில் போலீசார், கைதிகளின் அறைகள், அவர்களது உடைமைகள், கழிவறைகள், குளியல் அறைகள், சமையல் கூடம், தோட்டப் பகுதிகள், மரத்தடி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் ஜல்லடை போட்டு சலிக்கும் வகையில் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையின் காரணமாக ஜெயில் வளாகத்தில் பரபரப்பு நிலவியது. சோதனையின் முடிவில் அளிக்கப்படும் அறிக்கையில் என்னென்ன சிக்கியது என்பது தெரியவரும்.

CENTRAL JAIL trichy
இதையும் படியுங்கள்
Subscribe