Advertisment

ரஜினி கமல் திடீர் சந்திப்பு...

Sudden meeting of Rajini Kamal

வருகின்ற 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் தமிழகத்தில் சூடு பிடித்திருக்கும் நிலையில், அனைத்துக் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு, தேர்தல் பிரச்சாரம் எனக் களத்தில் தீவிரமாகச் செயலாற்றி வருகின்றன. நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம்கட்சியும் தேர்தல் பிரச்சாரம், விருப்பமனு, கட்சி மாநாடு எனஅறிவித்து வருகிறது.

Advertisment

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன், நடிகர் ரஜினிகாந்த் உடன் திடீர் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக அறிவித்து, பின்னர் அந்த முடிவிலிருந்து பின்வாங்கினார். ரஜினிகாந்த் அரசியல் கட்சிஆரம்பிக்கப் போவதில்லை என தெரிவித்த நிலையில்,அவர்அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை என்றாலும் நண்பர் என்ற முறையில் சட்டமன்றத் தேர்தலில் நண்பர் ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்பேன் என நடிகர் கமலஹாசன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் நடிகர் கமலஹாசன் ரஜினிகாந்தை சந்தித்தார்.

Advertisment

kamalhaasan Makkal needhi maiam rajinikanth
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe