Advertisment

சிறைக் கைதி திடீர் மரணம்; போலீசார் விசாரணை

Sudden lost their live of jail inmate; Police investigation

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சிறைக் கைதி திடீர் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே தமிழகத்தில் அண்மைக்காலமாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவோர்உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தது தொடர்பான சம்பவம் பரபரப்பைக் கிளப்பியிருந்தது. போலீசாரின் தாக்குதலால்தான் அவர்கள் உயிரிழந்ததாக உறவினர்கள் போராட்டங்கள்நடத்தியிருந்தனர்.

Advertisment

குறிப்பாகத்தூத்துக்குடி சாத்தான்குளம் சம்பவம், அதனைத் தொடர்ந்து சென்னையில் விக்னேஷ் என்ற இளைஞர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டு பின்னர் உயிரிழந்தது போன்ற சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் இருந்த கைதி உதயகுமார் திடீர் உடல்நலம் பாதிக்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்பாதி வழியிலேயே உயிரிழந்துள்ளார். கைதி உதயகுமார் மரணம் குறித்து பெருமாள்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

incident nellai police Prison
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe