Sudden IT raid on IT companies in Chennai

சென்னையில் பல்வேறு ஐடி நிறுவனங்களில் திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இயங்கி வரும் பல்வேறு மென்பொருள் நிறுவனங்களில் இந்த சோதனையானது நடைபெற்றுவருகிறது. சமீபகாலமாக வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் ஒவ்வொரு துறையாக கையில் எடுத்து சோதனையில்ஈடுபட்டு வருகின்றன. அண்மையில் புதுக்கோட்டையில் மணல் குவாரிகளை நடத்தி வரும் அதிபர்கள் வீடுகளில் சோதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று ரியல் எஸ்டேட் அதிபர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதேபோல்மின்வாரியத்திற்கு உபகரணங்களை விநியோகிக்கும் நிறுவனங்களிலும்வருமானவரித்துறை சோதனை செய்திருந்தது. இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் பகுதியில் உள்ள ஒருஐடி அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை பெருங்குடி, கந்தன் சாவடி ஆகிய பகுதிகளில் உள்ள மென்பொருள் நிறுவனங்களிலும் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகிறது.

Advertisment