குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட கைதிக்கு திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டு, மூக்கில் ரத்தக் கசிவு ஏற்பட்டதால் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சேலம் ஜாரி கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் எல்லப்பன் (70). குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை பதுக்கி வைத்து விற்றதாக கொண்டலாம்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் அவருக்கு திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டு, மூக்கில் இருந்து ரத்தக்கசிவு ஏற்பட்டது. முதல் கட்டமாக, சிறையில் உள்ள மருத்துவக் குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்தனர். தொடர் சிகிச்சைக்காக அவரை சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு காவல்துறை பாதுகாப்புடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.