Advertisment

ஓட்டுநருக்கு திடீர் உடல்நலக்குறைவு; கட்டுப்பாட்டை இழந்த பேருந்து

Sudden illness of the driver; The bus lost control

கும்பகோணத்தில் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பேருந்து ஓட்டிக் கொண்டிருந்த ஓட்டுநருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதே இந்த விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

Advertisment

ஜெயங்கொண்டத்திலிருந்து அரசு பேருந்துஒன்றுகும்பகோணம் சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தை இயங்கிக் கொண்டிருந்த ஓட்டுநர் நடராஜனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் இருந்த கருங்கல் ஜல்லி குவியலில் இறங்கியது. தட்டுத்தடுமாறி நின்ற பேருந்தில் இருந்துபயணிகள் அனைவரும் உடனடியாக கீழே இறங்கினர்.

Advertisment

இந்த விபத்தில் சிலருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து ஓட்டுநருக்கு ஏற்பட்ட உடல்நிலை குறைவால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை ஒரு பள்ளத்தில் இறங்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Kumbakonam jayankondam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe