Advertisment

திடீரென உயர்ந்த வெங்காயம் விலை; சடாரென சரிந்த தங்கம் விலை

Sudden high onion prices; The price of gold has plummeted

Advertisment

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 1,320 ரூபாய் அதிரடியாகக் குறைந்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கத்தின் விலை 57,600 ரூபையாக இருக்கிறது. இதனால் 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 7,200 ஆகவும், ஒரு கிராம் வெள்ளியின் விலை மூன்று ரூபாய் குறைந்து 102 ரூபாயாகவும் விற்பனையாகி வருகிறது.

கடந்த வாரங்களில் தங்கத்தின் விலை உச்சத்தில் இருந்து நிலையில் ஒரு சில தினங்களாகவே தங்கத்தின் விலை குறைந்து வந்தது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ள நிலையில் தங்கத்தின் விலை மேலும் குறையலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஒரு சவரன் தங்கம் தங்கத்திற்கு 1,320 ரூபாய் குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 7200ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

வரத்து குறைவுகாரணமாக ஒரு பக்கம் காய்கறிகளின் விலை ஏற்றம் கண்டுள்ளது. குறிப்பாக வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாயை எட்டியுள்ளது. சில்லறை விற்பனை கடைகளில் கிலோ 120 ரூபாய் வரை வெங்காயம் விற்பனை செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

onion
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe