திருச்சி சின்னக்கடை வீதியில் உள்ள ஒரு தனியார் ஜுவல்லரியின் இரண்டாவது மாடியில் ‘பாலாஜி ஹால் மார்க்கிங்’ எனும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இன்று அந்நிறுவனத்தில் உள்ள ஊழியர்கள் மதிய உணவு அருந்த கீழ் தளத்திற்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. நிறுவனத்தில் இருந்து புகை வருவதை பார்த்த ஊழியர்கள், தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் தீ கட்டுக்கடங்காமல் பரவவே தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் உள்ள ஒவ்வொரு இயந்திரமும் 6 லட்சம் ரூபாய் மதிப்பிலானவை. தற்போது அந்நிறுவனத்தின் 5 ஹால்மார்க் முத்திரையிடும் இயந்திரங்கள் தீயில் எரிந்து பழுதடைந்துள்ளதாக கூறுகின்றனர்.