
சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரிபா மகப்பேறு மருத்துவமனையின் ஒரு அறையில் மின் கசிவு ஏற்பட்டதால் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபா காந்தி மகப்பேறு மருத்துவமனையில் இரண்டாம் தளத்தில் இருக்கக்கூடிய ஒரு அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உடனடியாக இந்த தீ விபத்து குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில்,தீ அணைக்கப்பட்டது. ஆனால் அந்த வார்டில் குழந்தைகள் வைக்கப்பட்டிருந்ததால் குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீருடனும் வேதனையுடனும் இரண்டாம் தளத்தில் காத்திருக்கிறார்கள்.
இந்த விபத்தில் எந்த உயிர் சேதமோ, காயங்களோ ஏற்படவில்லை என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிறு பாதிப்புகள் இருந்தால்உடனடியாக எழும்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 108 ஆம்புலன்ஸ்கள் கஸ்தூரிபா மருத்துவமனைக்கு வந்துள்ளன. தகவலறிந்து சேப்பாக்கம் தொகுதியின் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் சம்பவ இடத்திற்கு வந்துஆய்வு மேற்கொண்டார்.
Follow Us