Advertisment

பறிமுதல் செய்த வாகனத்தில் திடீர் தீ... போலீஸார் விசாரணை...!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் வட்டாட்சியர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகவளாகத்தில் வருவாய் ஆய்வாளர் கட்டிடம், பதிவாளர் அலுவலகம், வாணியம்பாடி கிளை சிறைச்சாலை போன்றவை உள்ளன.

Advertisment

 Sudden fire in confiscated vehicle

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இதில் வருவாய் ஆய்வாளர் கட்டிடத்திற்கு முன்பாக வருவாய்த் துறையினரால் மணல் கடத்தல், சட்ட விரோத பொருள் கடத்தல் வழக்குப் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இந்த வாகனங்களில் மகேந்திரா லோடு வண்டி என்கிற வாகனமும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இந்த வாகனம் மார்ச் 7ஆம் தேதி மாலை 6.30மணி அளவில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனை பார்த்து கிளைச் சிறை பணியில் இருந்த காவலர்கள் பார்த்து அதிர்ச்சியாகினர். அவர்கள் உடனடியாக இதுபற்றி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் அந்த இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். பின்னர் இதுபற்றி வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவயிடத்துக்கு வந்து தீ பற்றியது எப்படி என விசாரணை நடத்தி வருகின்றனர்.

police confiscated vehicle
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe