புதுக்கோட்டை மாவட்டத்தில் பல கூட்டுறவு நூற்பாலைகள் இருந்தது. ஆனால் தற்போது அறந்தாங்கி துரையரசபுரத்தில் உள்ள நூற்பாலை மட்டும் செயல்பட்டு வருகிறது.
இந்த நூற்பாலையில் இன்று மதியம் திடீரென தீ பற்றிக் கொண்டதால் பஞ்சு, நூல் ஆகியவற்றி தீ பற்றி வேகமாக பரவியது. உடனே அறந்தாங்கி, ஆவுடையார்கோயில், கீரமங்கலம், புதுக்கோட்டை ஆகிய ஊர்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் முயற்சிகள் நடந்தது. ஆனால் தீ அணையவில்லை. மாறாக வேகமாக தீ பரவியது. அதனால் பஞ்சு, மற்றும் நூல் போன்றவற்றி தீ பற்றி எரியத் தொடங்கியது. மேலும் இயந்திரங்களும் தீயில் கருகியுள்ளது. தொடர்ந்துதீயணைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
தீ அணைக்கப்பட்டாலும் தீயில் கருகிய மற்றும் தண்ணீரில் நனைந்த பஞ்சு, நூல், இயந்திரங்கள் மீண்டும் பயன்படுத்துவதில் சிக்கல் எற்பட்டுள்ளது. அதனால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்கின்றனர்.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது மர்ம நபர்கள் யாரும் தீ வைத்திருப்பார்களா என்பது பற்றி விசாரணைநடந்து வருகிறது.