தாம்பரத்திலிருந்து மதுரவாயல் பைபாஸில் பெண் ஒருவர் ஓட்டிவந்த காரானது நடு ரோட்டிலேயே தீ பிடித்து எரிந்ததால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடுபரபரப்பு நிலவியது.

தாம்பரத்திலிருந்து மதுரவாயல் பைபாஸில் போரூர் மேம்பாலம் அருகே வந்த காரின் முன்பகுதியில் ஏற்பட்ட தீ முழுவதும் பரவி முழு காரும் சாலையிலேயே பற்றி எரிந்தது. இதனால் வெளிப்பட்ட கரும்புகை அந்த பகுதிவரை பரவியது.
இது தொடர்பாக பூந்தமல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Follow Us