Sudden fire accident in van in vellore

Advertisment

வேலூர் மாவட்டம் குடியாத்தம் திருவள்ளுவர் மாவட்டம் பனப்பாக்கத்தில் இருந்து அருள் என்பவருக்குச் சொந்தமான லோடு வேனில் வைக்கோல் லோடு ஏற்றிக்கொண்டு விற்பனைக்காக குடியாத்தம் பகுதிக்கு வந்தது.

அப்போது, குடியாத்தம் அருகே நெல்லூர் பேட்டை சாலையில் சென்று கொண்டிருந்த வேனில் இருந்த வைக்கோல் மின் கம்பிகள் உரசி தீ பற்றியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, தீ மளமளவெனப் பரவிய நிலையில் போக்குவரத்து மிகுந்த பகுதியில் இருந்து உடனடியாக வேனை வேகமாக கொண்டு சென்று நெல்லூர் பேட்டை ஏரிக்கரை அருகே வேனை ஓட்டுநர் நிறுத்தினார்.

இதனையடுத்து, இது குறித்து குடியாத்தம் தீயணைப்புத் துறையினருக்குத்தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் வேனில் ஏற்றி வந்த ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான வைக்கோல் எரிந்து நாசமானது. மேலும் இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.