Advertisment

'திடீரென மண்ணுக்கடியில் ஏற்பட்ட கொப்பளிப்பு'-அச்சத்தில் உறைந்த கிராம மக்கள்

 'Sudden eruption underground' - Villagers frozen in fear

ராமநாதபுரத்தில் கிராமப் பகுதியில் மண்ணுக்குள் செல்லும் இயற்கை எரிவாயு குழாய் உடைந்து எரிவாயு வெளியேறியது கிராம மக்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

ராமநாதபுரத்தில் பல்வேறு இடங்களில் ஓஎன்ஜிசி சார்பில் இயற்கை எரிவாயு பூமிக்கு அடியில் குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு எரிவாயு சேகரிக்கும் நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் பனைக்குளம் அடுத்துள்ள சோகையன்தோப்பு பகுதியில் மங்கம்மா சாலை எனும் காட்டுப் பகுதியில்தேங்கி இருந்த மழை நீர் திடீரென கொப்பளிப்பது போல காட்சி ஏற்பட்டுள்ளது.

Advertisment

இதனைப் பார்த்த அந்த பகுதி மக்கள் தீயணைப்புதுறையினர் மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனத்தி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனடியக அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் ஓஎன்ஜிசி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பலமான தாக்குதலால் பூமிக்கு அடியில் செல்லும் குழாய் உடைந்ததால் எரிவாயு கசிந்து தெரிய வந்தது. அந்த பகுதியில் ஜேசிபி வாகனம் ஒன்று பயன்பாட்டிற்காக வந்த போது ஏற்பட்ட தாக்கம் காரணமாக தான் குழாய் உடைத்ததாகக் கூறப்படுகிறது. எரிவாயுக் கசிவு சம்பவம் கிராம மக்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

villagers police ONGC wells Ramanathapuram district
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe