sudden disorder; Electric trains delayed

சென்னை பெரம்பூர் லோகோ ரயில் நிலையத்திலிருந்து பெரம்பூர் கேரேஜ் ரயில் நிலையத்திற்கு இடையே சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளதால் சென்ட்ரல் மற்றும் அரக்கோணம் மார்க்கத்தில் செல்லும் மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பயணிகள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தை அடுத்து சென்னை பெரம்பூர் லோகோ மற்றும் பெரம்பூர் கேரேஜ் நிலையங்கள் உள்ளது. இந்த ரயில் நிலையங்களுக்கு இடையே திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளது. சென்ட்ரல் மற்றும் அரக்கோணம் மார்க்கத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் காலை 7:30 மணி முதல் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது.

காலையில் பணிக்கு மற்றும் கல்லூரி, பள்ளிகளுக்கு செல்வோர் இதனால் அவதி அடைந்தனர். தொழில்நுட்பக் கோளாறு குறித்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் சிக்னல் கோளாறு சரி செய்யப்பட்டு மின்சார ரயில்போக்குவரத்து சீர் செய்யப்படும் என ரயில்வே துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.