Advertisment

மலை உச்சியில் திரண்ட அரிட்டாப்பட்டி மக்கள்; வெளியான அதிர்ச்சி முடிவு

 A sudden decision taken by the people of Aritapatti who gathered on the hill

Advertisment

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் அரிட்டாபட்டி கிராமத்தை ஒட்டியுள்ள நாயக்கர்பட்டி கிராமத்தில் டங்ஸ்டன் கனிமம் எடுப்பதற்கான ஆய்வுடன் கூடிய சுரங்க குத்தகை ஏல அறிவிப்பு செய்யப்பட்டு கடந்த நவம்பர் 7ஆம் தேதி வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமாக இருக்கக்கூடிய ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்தை சுரங்க அமைச்சகம் தகுதியான நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியானது.

மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி, நாயக்கர்பட்டி கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதியைப் பொறுத்தவரை பல்லுயிர் பாரம்பரிய பகுதி என தமிழக அரசால் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் சுமார் 5000 ஏக்கரில் சுரங்கம் அமைப்பதற்கு வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக செய்திகள் வெளியானது. சுற்றுச்சூழல் ஆழ்வார்கள், பொதுமக்கள், அரசியல் கட்சிகள் ஆகியோர் எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்க உரிமையை ரத்து செய்ய வலியுறுத்தி சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்யும் வரை தொடர் போராட்டம் நடத்துவதாக அரிட்டாபட்டி மக்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். மலை மேல் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடவும் அவர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஒன்றிய அரசு டங்சன் ஆலைக்கான ஏலத்தை ரத்து செய்யும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். அந்த பகுதியில் அமைந்துள்ள மலை மீது ஊர் மக்களும் அமர்ந்து ஒன்றுகூடி இது குறித்து ஆலோசித்து வருகிறார்கள்.

TNGovernment Melur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe