Advertisment

நடிகை சித்ரா வழக்கில் தந்தை எடுத்த திடீர் முடிவு 

 A sudden decision taken by actress Chitra's father

கடந்த 2021 ஆம் ஆண்டு சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது வரை நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருவள்ளூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கின் விசாரணையை சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அவர்தாக்கல் செய்துள்ள மனுவில், ''சித்ரா மரணம் தொடர்பான விசாரணையை இழுத்தடிக்கும் நோக்கில் வேண்டுமென்றே சித்ராவின் கணவர் ஹேம்நாத் பல்வேறு மனுக்களை தாக்கல் செய்து குழப்பி வருகிறார். 2021 ஆம் ஆண்டிலிருந்து வழக்கின் விசாரணை குற்றச்சாட்டு பதிவு செய்யும் கட்டத்திலேயே உள்ளது. வயது மூப்பு காரணமாக என்னால் வழக்கின் விசாரணைக்காக திருவள்ளுவர் நீதிமன்றத்திற்கு சென்று வருவதற்கு சிரமமாக இருக்கிறது. சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு இந்த வழக்கை மாற்றி விசாரணையைவிரைந்து முடிக்க வேண்டும்' என கோரிக்கை வைத்துள்ளார்.

Advertisment

highcourt police chithra
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe