Advertisment

சாலை, வீடுகளில் ஏற்பட்ட திடீர் விரிசல் - அச்சத்தில் கோக்குடல் மக்கள்

Sudden cracks in the houses-Kokudal people in fear

உதகை அருகே பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் ஏற்பட்ட திடீர் விரிசல் அந்தப் பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கடநாடு ஊராட்சிக்கு உட்பட்டது கோக்குடல் கிராமம். இந்த கிராமத்தில் திடீரென பத்துக்கும் மேற்பட்ட வீடுகளின்சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் சாலையிலும் விரிசல் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் நில அதிர்வு காரணமாக இப்படி ஏற்பட்டுள்ளது என்று அச்சத்தில் உள்ளனர். இது தொடர்பாகபுவியியல் துறைக்கு உடனடிதகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் விரிசல் ஏற்பட்ட வீடுகளில் புவியியல் துறை இளம் நிலை அலுவலர் சரவணன் ஆய்வு செய்தார். அதன்பிறகு இது தொடர்பான அறிக்கையைப் புவியியல் துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்ப உள்ளதாகவும் இதுகுறித்து பொதுமக்கள் அச்சமடையத்தேவையில்லை எனவும் தெரிவித்தார். இருப்பினும் சமூக வலைத்தளங்கள் மூலம் வெளியான சுவர் விரிசல் படங்கள் வைரலாகி மக்களை அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

Advertisment

environment nilgiris
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe