Advertisment

திடீரென சரிந்த மேடை; எகிறிக் குதித்துத் தப்பித்த அன்புமணி ராமதாஸ்

 A sudden collapse of the pmk platform; Anbumani Ramadoss escaped by jumping

Advertisment

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்ட கூட்டத்தில் மேடை சரிந்து விழும் வீடியோசமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சேலம் வடக்கு பாமக சார்பில் சேலம் மாவட்டம் வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே கட்சிக் கொடி ஏற்றும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். இதற்காக சிறிய அளவிலான மேடை ஒன்றும் போடப்பட்டிருந்தது. கொடியை ஏற்றி வைத்துவிட்டு அன்புமணி ராமதாஸ் மேடையில் பேசச்சென்ற பொழுது கட்சி தொண்டர்களும் மேடையில் ஏற முற்பட்டனர். இதனால் அதிக பாரம் தாங்க முடியாமல் மேடையானது சரிந்து விழுந்தது.

இதில் அனைவரும் கீழே விழுந்த நிலையில் அன்புமணி ராமதாஸ் மட்டும் முன்புறமாக எகிறிக் குதித்துத்தப்பித்துக் கொண்டார். இந்த விபத்தில் யாருக்கும் எவ்விதமான காயமும் ஏற்படவில்லை. பின்னர் டேபிள் மீது ஏறி நின்று அன்புமணிதனது உரையைத்தொடங்கினார். வாழப்பாடியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்ட மேடை சரிந்து விழுந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

pmk politics
இதையும் படியுங்கள்
Subscribe