Advertisment

திருச்சி மாநகராட்சி, நகராட்சி அலுவலா்கள் திடீர் மாற்றம்

Sudden change in Trichy Municipal Corporation, Municipal offices

Advertisment

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சிகளில் பணியாற்றி வரும் அலுவலா்கள் 19 பேர் திடீா் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இவா்களில் திருச்சி மாநகராட்சியில் உதவி செயற்பொறியாளா்களாக பணியாற்றி வந்த ராஜேஷ் கண்ணா, கோவை மாநகராட்சிக்கும், ரகுராமன் கடலுாா் மாநகராட்சிக்கும், ஜெகஜீவராமன் மதுரை மாநகராட்சிக்கும் மாற்றப்பட்டுள்ளனா்.

இவா்களுக்குப் பதிலாக, வேலூர்மாநகராட்சியிலிருந்து சந்திரசேகா், சேலம் மாநகராட்சியிலிருந்து செந்தில்குமாா், அருப்புக்கோட்டை நகராட்சியிலிருந்து ராமலிங்கம் ஆகியோா் திருச்சி மாநகராட்சி உதவி செயற்பொறியாளா்களாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இதற்கான உத்தரவை நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல்துறை முதன்மைச் செயலா் காா்த்திகேயன் பிறப்பித்தாா்.

trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe