Advertisment

ரவீந்திரநாத்துக்கு திடீர் அழைப்பு!? மத்திய அமைச்சராகிறாரா ஓபிஎஸ் மகன்! 

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து, நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி இன்று மாலை பதவியேற்க உள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறவுள்ள விழாவில் பல்வேறு மாநில முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் உலக நாடுகளின் தலைவர்கள் என 8000 வி.ஐ.பி க்கள் பங்கேற்க உள்ளனர்.

Advertisment

 Sudden call to Ravindranath!?

இந்நிலையில் தமிழகத்தில் பாஜக கூட்டணியில் இருந்த அதிமுகவிற்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புகளும் வாதங்களும் நடைபெற்றுவந்த நிலையில். தற்போது தமிழகத்தில் அதிமுக சார்பில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிபெற்ற தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு உடனடியாக வரும்படி டெல்லியிலிருந்துஅழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளது.

Advertisment

இந்த அழைப்பு பிரதமர் அலுவலகத்திலிருந்து வந்திருக்கும் அழைப்பு என்பதாலும், இன்று மாலை பதவியேற்பு விழாநடைபெறும் நிலையில்வந்துள்ள அழைப்பு என்பதாலும் மிகமுக்கியமாக கவனிக்கப்படும் ஒன்றாக உள்ளது.

இருப்பினும் இன்று மாலை அதிகாரபூர்வஅமைச்சரவை பட்டியல் வெளியானவுடன்என்ன நிலை என்று தெரிந்துவிடும்.

minister modi ops son P Raveendranath Kumar
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe