பழனி முருகன் கோவில்ஐம்பொன் சிலை தொடர்பானமோசடி வழக்கில் ஏற்கனவே ஸ்தபதி முத்தையா மற்றும் ராஜாவை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவலர்துறைகைது செய்து தற்பொழுது ஜாமீனில் வெளியே வந்துஇருக்கிறார்கள்.
அதை தொடர்ந்து பழனிக்கு விசிட் அடித்த ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் கடந்த இரண்டு நாட்களாக கோவில் பணியாளர்கள் மற்றும் முன்னாள் பணியாளர்களிடம் அதிரடி விசாரணை நடத்தினார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/erere_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/fee78f03-0186-44ca-bfe5-ede65286dcc9.jpg)
அதை தொடர்ந்து பழனி கோவிலில் பணிபுரிந்த உதவி ஆணையர் புகழேந்தி மற்றும் சென்னை இந்து சமய அறநிலையத்துறை தலைமை அலுவலகத்தில் தங்கநகை சரிபார்ப்பு அதிகாரியாக பணியாற்றி வந்த தேவேந்திரன் ஆகியோரை ஐ.ஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான காவலர்க்குழு திடீரெனகைது செய்து அதிரடி விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த திடீர் கைது நடவடிக்கையால்கோவில்பணியாளர்கள் பலர் அதிர்ச்சியில் மூழ்கிவிட்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)