Advertisment

படையப்பா போலீஸ் திடீர் கைது!

இன்று காலை விழுப்புரம் புது பஸ்டாண்டில் பாதுகாப்பு பணியில் சில போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது டிப்டாப்பான இளைஞர் ஒருவர் போலீஸ் தோரணையில் கம்பீர நடைபோட்டபடியே பஸ்நிலையத்தை வலம்வந்து கொண்டிருந்தார். ஆனால் உண்மை போலீசுக்கு பெரும் சந்தேகம் உண்டானது யார் இந்த இளைஞன் என்று யோசித்த படியே இளைஞனை நெருங்கி தம்பிக்கு எந்த ஊரு என்றுகேட்டனர்.என்ன பார்த்ததாலே தெரியலையா? போலீஸ்காரன் என்று உதார் விட்டுள்ளார் அந்த இளைஞன்.

Advertisment

fake police

எந்த மாவட்ட போலீஸ் என அடுத்த கேள்வியை போட இதே மாவட்டம் தான் கடையம் தான் என் சொந்த ஊரு என்னை இப்படி எல்லாம் சந்தேகப்படக் கூடாது. இதோ பாருங்கள் என தனது அடையாள அட்டையை வீராப்பாக எடுத்து காட்டினார் அந்த இளைஞர். அதில் மாவட்ட எஸ்பி.ஜெயக்குமாரின் கையெழுத்துடன் கூடிய சகபோலீசார் வைத்துள்ளது போன்று பக்காவான அடையாள அட்டை போலவே இருந்தது. ஆனாலும் போலீசுக்கு இளைஞன் மீதுபலத்த சந்தேகம் உண்டாக உடனே மாவட்ட எஸ்பி அலுவலகம் மூலம்கண்டாச்சிபுரம் காவல்நிலையம் மூலம் கடையம் விசாரித்தனர்.

Advertisment

 Sudden arrest of the fake police

இவனது அப்பா தங்கமணி அவரது மகன் தான் படையப்பா ஆனால் உண்மையான போலீஸ் இல்லை என பதில் கிடைத்தது. அப்புறம் என்ன, போலீஸ் என்று ஊதார் விட்டுக் கொண்டு அப்பகுதியில் சுற்றி திரிந்துள்ளாய் என்ற தகவல்கள் எல்லாம் கிடைத்துள்ளன எங்களுக்கு, அப்புறமென்ன வாப்பா தம்பி என தாலுக்கா காவல்நிலையத்தில் கொண்டு போய்வைத்து நான்கு பிரிவுகளில் வழக்குபதிவு செய்துசிறைக்கு அனுப்பியுள்ளது உண்மை போலீஸ். படையப்பா இப்போது சிறையப்பா என கம்பி எண்ணிக்கொண்டுள்ளார். 20 வயதிற்குள் இப்படிப் பட்ட கிரிமினல் புத்தியா? என்கிறது உண்மை போலீஸ்.

arrest fake police police Viluppuram
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe