sudden accident in a tourist vehicle to Tiruvannamalai

Advertisment

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு வார இறுதி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆந்திரா, கர்நாடகா தெலுங்கானாவிலிருந்தும் தமிழகத்தின் பிற பகுதியில் இருந்தும் கூட்டம் அலைமோதுகிறது.

அதன்படி ஞாயிற்றுக்கிழமையான நேற்று(26.5.2024) அதிகளவு கூட்டம் திருவண்ணாமலைக்கு வந்திருந்தது. இவர்கள் சுவாமி தரிசனம் செய்துவிட்டு இரவு அவரவர் ஊருக்கு புறப்பட்டு சென்றனர். அதன்படி ஆந்திராவைச் சார்ந்த ஒரு குழுவினர் கிரிவலம் வந்துவிட்டு சுவாமி தரிசனம் செய்துவிட்டு இரவு திருவண்ணாமலை இருந்து ஏசி டெம்போ வேனில் புறப்பட்டு ஆந்திராவுக்கு சென்றனர்.

மாடவீதியில் பெரிய தெருவில் வேன் வரும்பொழுது திடீரென வேனுக்குள் புகை மண்டலம் உருவானது. உடனே வேனில் இருந்தவர்கள் அலறி அடித்து கீழே இறங்கி வந்து நின்றனர். திடீரென உள்ளே தீப்பற்றி எரியத்தொடங்கியது. வேனிலிருந்து பொருட்களை எடுத்து வைத்தனர். அதன் பின்னர் அங்கிருந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர் தீயணைப்பு வாகனம் ஒன்றும் தீயை அனைத்தது. ஏசி உள்ளே தீப்பிடித்திருக்கலாம் என கூறப்படுகிறது.