Advertisment

"சூடான் நாட்டில் தீவிபத்தில் பலியான தமிழர்களை அரசு மீட்டுக்கொடுக்கவேண்டும்"- பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினர் கோரிக்கை!

ஆப்பிரிக்க நாடான சூடான் தலைநகர் கார்டோவின் பாஹ்ரி பகுதியில் சலூமி என்ற செராமிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 18 பேர் இந்தியர்கள் என்றும், அதில் மூன்றுபேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

Advertisment

 sudan fire accident issue

இந்நிலையில் உயிரிழந்த மூன்றுதமிழர்களில் ஒருவர் நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆலங்குடிச்சேரி கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி என்பவரது மகனான பொறியியல் பட்டதாரி ராமகிருஷ்ணன் என்பது தெரியவந்துள்ளது. பொறியியல் படிப்பு முடித்துவிட்டு குடும்ப கஷ்டத்தால் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சூடான் நாட்டின் டைல்ஸ் கம்பெனிக்கு வேலைக்கு சென்ற ராமகிருஷ்ணன் விபத்தில் பலியாகியிருக்கிறார்.

அவர்குறித்து யாரை தொடர்பு கொள்வது என்பது தெரியவில்லை என்றும், சடலத்தை பெற்றுத்தர இந்திய தூதரகம் உதவி செய்ய வேண்டும் என்றும் ராமகிருஷ்ணனின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

sudan sudan country
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe