
மதுரையில் மதுபோதையில் உணவகத்திற்கு வந்த நபர்கள் 'சூடாக வடை வேண்டும்' என கேட்டு முதியவரை தாக்கியதோடு கல்லாவில் இருந்த பணத்தை திருடிக் கொண்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மதுரை கீழக்குடி பகுதியில் துரைசாமி என்பவர் சாலையோர உணவகம் ஒன்று நடத்தி வந்தார். இந்த கடைக்கு அதிகாலை 5 மணிக்கு போதையில் வந்த இளைஞர்கள் சிலர் கடையில் பணியிலிருந்த முதியவரிடம் சூடாக வடை கேட்டுள்ளனர். 'ஆறு மணிக்கு மேலே தான் வடை சுடுவோம்' என கடையின் உரிமையாளர் மற்றும் பணியாளரான முதியவர் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த போதை கும்பல் சப்ளை பணியிலிருந்த முதியவரை கொடூரமாக தாக்கினர். கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தையும் திருடிக் கொண்டு சென்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் கடையில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியது. இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட நிலையில்,கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில்போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow Us