
புதுச்சேரியில் குப்பைகளை சேகரிப்பது போல நோட்டமிட்டு மதுபானக் கடையை உடைத்து பணத்தை திருடிச் சென்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரியில் மதுபானக் கடை ஒன்றின் ஷட்டரை உடைத்து சுமார் 2 லட்சம் ரூபாய் பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணையில் ஈடுபட்டனர். அப்பொழுது சந்தேகப்படும்படியாக நபர் ஒருவர் குப்பைகளை பெரியமூட்டையில் எடுத்துச் செல்பவர் போல் வேடமிட்டு கொண்டு அங்குமிங்கும் நோட்டமிட்டுக் கொண்டிருந்தார். முகத்தை மூடியபடி நோட்டமிட்ட அந்த நபரை போலீசார் விசாரித்ததில் அவர் தஞ்சையைச் சேர்ந்த மனோகரன் என்பது தெரிய வந்தது. குப்பையை சேகரிப்பவர் போல் வேடமிட்டு நூதன முறையில் மதுபானக் கடையில் திருடியது தெரியவந்தது. தொடர்ந்து கைது செய்த போலீசார் குற்றத்தில் ஈடுபட்ட அவரை சிறையில் அடைத்தனர்.