Advertisment

"புதுமையை நாடும் இதுபோன்ற அருங்காட்சியகங்கள் காலத்தின் தேவையாகிறது!"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! (படங்கள்) 

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "துபாய் மற்றும் அபுதாபி பயணம் பல்வேறு அனுபவங்களைத் தந்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பாதைக்கான நம்பிக்கையை அளித்துவரும் இப்பயணம், அறிவியல் பார்வையிலும் புதுமையை அள்ளித் தந்துள்ளது.

Advertisment

பழங்காலத்தை நினைவூட்டுவது மட்டுமே அருங்காட்சியகங்களின் பணி அல்ல; புதுமையையும் எதிர்காலத்தையும் நோக்கி நம்மை விரைவுப்படுத்துவதும் கூட அதன் பணி என 'MuseumOfTheFuture' காட்டியது.போலியான பழம்பெருமைகளைப் பேசி மூடத்தனங்களுக்குள் புகுந்துகொள்ளாமல் அறிவியல் வழியில் புதுமையை நாடும் இதுபோன்ற அருங்காட்சியகங்கள் காலத்தின் தேவையாகிறது!" என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

dubai expo 2020 chief minister Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe