Advertisment

"இம்மாதிரியான கொடும் குற்றங்கள் உருவாகின்றன"- ஜோதிமணி எம்.பி. ஆவேசம்!

publive-image

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "விருதுநகர் பாலியல் வன்புணர்வு கொடூரம் அதிர்ச்சியளிக்கிறது. பொள்ளாச்சி போலவே, பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி, 8 பேர் தொடர்ந்து கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இதில் 4 பேர் பள்ளி மாணவர்கள். உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்த காவல்துறைக்கு நன்றி.

Advertisment

பள்ளி மாணவர்கள் மனதில் கூட, கொடூரமான பாலியல் வன்புணர்வு குற்றத்தில் ஈடுபடும் அளவிற்கு பாலியல் வக்கிரம் புரையோடிக் கிடக்கிறது. பெண்ணை வெறும் உடலாக, காமப்பொருளாக மட்டும் பார்க்கும் மன நிலையிலிருந்தே இம்மாதிரியான கொடும் குற்றங்கள் உருவாகின்றன.

Advertisment

கடுமையான சட்ட நடவடிக்கைகளோடு, கல்வித் திட்டத்திலும் பெண்களை சமமாக,அறிவுத்தளத்தில் அணுகுவது பற்றிய உரையாடல் நிகழும் விதமாக மாற்றங்கள் தேவை.அப்பொழுதுதான் இம்மாதிரியான பாலியல் வக்கிரங்களை, வன்முறைகளை கட்டுப்படுத்த முடியும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

congress jothimani Tweets
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe