/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mks4434_6.jpg)
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று (23/04/2022) மாலை நடைபெற்ற 'Tech Know 2022' என்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எட்டு பிரிவுகளின் கீழ் விருதுகளை வழங்கினார். அதேபோல், 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் ஆறு சிறந்த மாணவர்களுக்கு திறன் பயிற்சி கடிதம் மற்றும் பணியாணையையும் முதலமைச்சர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "எந்த துறையிலும் ஒற்றுமையாக செயல்பட்டால் தான் வெற்றி காண முடியும். இளைஞர்களிடம் எதிர்பார்க்கும் தகுதியை நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும். தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் தகுதியை மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்கள் வழங்க வேண்டும். தமிழகத்தின் கல்வி மற்றும் தொழில் வளர்ச்சி பல்வேறு மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. நெ.1 என்ற நிலையை தமிழகம் அடையத் தேவையான திட்டங்களை அரசு மேற்கொண்டு வருகிறது. உயர்கல்வியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. கல்வித்துறையில் தமிழகம் உயரிய நிலையை அடைய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)