Skip to main content

ஆபத்தோடு தினம் தினம் கடக்கும் மாணவர்களும், பொதுமக்களும்....கண்டுக்கொள்ளாத அரசு!!

Published on 17/10/2019 | Edited on 17/10/2019

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ச்சியாக மாலை நேரங்களில் மழை பெய்கிறது. மாலை நேரத்தில் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லக்கூடிய மாணவர்கள் மற்றும் தொழிற்சாலை, அலுவலக பணிகள் முடிந்து வீட்டுக்கு செல்பவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
 

subway problem in ambur


அதிலும் பெத்லகேம், ரெட்டிதோப்பு, கம்பி கொல்லை, மலை கிராமங்களான நாய்க்கனேரி, பனங்காட்டுஎரி  ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது பகுதிக்கு செல்ல வேண்டும்மென்றால் ஆம்பூரில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதை வழியாகத்தான் செல்லவேண்டும். மழை பெய்யாத நேரங்களில் எந்த பிரச்சனையும்மில்லை, மழை காலங்களில் மக்கள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். 

இரண்டு சுரங்க பாதைகள் இருந்தாலும் செல்லக்கூடிய மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். அப்பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாய்கள் நிரம்பி ஆங்காங்கே உடைந்து சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடி, அந்த கழிவுநீர், மழை நீர் போக சரியான கால்வாய்கள் இல்லாமல் சுரங்கப்பாதையில் வந்து தேங்கிவிடுகின்றன. ரயில்வே சுரங்கப்பாதை நீரில் முற்றிலுமாக நிரம்பிவிடுவதால் நடந்து செல்பவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இந்த வழியாக செல்ல மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். தங்களது துணிகள் தண்ணீரில் நனைந்துவிடுவது ஒருப்புறம்மென்றால், துர்நாற்றம் மற்றொரு புறம். 

இதற்காகவே பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சுரங்கபாதையை தவிர்த்துவிட்டு, ரயில்வே பாதையை கடந்து செல்கின்றனர். பெரியவர்கள் ஓரளவு விவரம் உள்ளவர்கள் ரயில்வே லைனை கிராஸ் செய்து சென்றுவிடுகிறார்கள். மாணவ - மாணவிகள் ரயில்வே லைனை கிராஸ் செய்து தங்களது குடியிருப்பு பகுதிக்கு செல்வது மக்களை அச்சத்திற்கு உள்ளாக்குகிறது.


மழை காலம் தொடங்கி அது முடியும் வரை இந்த பாதை பயன்படுத்த முடிவதில்லை என்பதால் ரயில்வே மேம்பாலம் அமைத்து தரக் கோரி அப்பகுதி மக்கள் கடந்த 20 ஆண்டுகளாக பலமுறை எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் இதுவரை பெரியதாக எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர் அப்பகுதி மக்கள். மழை காலங்களில் திக் திக் மனநிலையிலேயே ரயில்வே லைனை க்ராஸ் செய்கின்றனர் மாணவர்களும், பொதுமக்களும்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கார்கள் மோதி விபத்து; 3 பேர் பலியான சோகம்

Published on 21/01/2024 | Edited on 21/01/2024
Car incident 3 people involved

இரு கார்கள் மோதி நிகழ்ந்த விபத்தில் சிக்கி 3 பேர் பலியான சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள பச்சக்குப்பம் என்ற பகுதியில், இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி சென்ற கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் எதிர்த்திசையில் வந்த கார் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த சரவணன், பெங்களுருவைச் சேர்ந்த மைத்தேரயன், பெண் ஒருவர் என 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும் இந்த விபத்தில் சிக்கி 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு சிக்கிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் இந்த விபத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Next Story

ஆம்பூர் ஆஞ்சநேயர் ஆலயத்தில் நடிகை ஷகிலா சாமி தரிசனம்!

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

Actress Shakila Swamy Darshanam at Ambur Anjaneyar Temple

 

பிரியாணிக்கு பெயர் பெற்ற ஆம்பூரில் உள்ள ஒரு சின்ன ஆலயத்தில் பிரபல நடிகை சென்னையில் இருந்து வந்து சுவாமி தரிசனம் செய்தது மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ. கஸ்பா பகுதியில் புகழ்பெற்ற அருள்மிகு பெரிய ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆஞ்சநேயர் சனி பகவானை காலில் மிதித்தபடி காட்சி அளிக்கிறார். இங்கு வந்து ஆஞ்சநேயரை வணங்கினால், ராகு, கேது தோஷம், சனி தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இதனால் ஆந்திரா, கர்நாடகா, ஓசூர் பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் சமீபகாலமாக வருகின்றனர். 

 

இந்நிலையில் நடிகை ஷகிலா தனது குடும்பத்துடன் வந்து ஆஞ்சநேயர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். மேலும், கோவிலில் விளக்கேற்றி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.