jk

Advertisment

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது தாழ்வு மண்டலமாக மாறி வலுப்பெற்றுள்ளது. இந்தக்காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி நவம்பர் 25- ஆம் தேதி, அதி தீவிரப் புயலாக்கரையைக்கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எங்கே கரையைக்கடக்கும் என்று உறுதியாகத் தெரியாத நிலையில், கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் மதியம் முதலே காற்றுடன் மழை பெய்து வருகிறது. கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் சென்னை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், பேருந்து போக்குவரத்துக்குறைக்கப்பட்டுள்ள நிலையில், நாளை காலை 10 மணி முதல் புறநகர் ரயில் சேவைரத்து செய்யப்பட்டுள்ளது.