சென்னை விமானநிலையத்தில் இன்று சுப்பிரமணியன் சுவாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், தமிழகத்தில் உள்ள அரசியல் வெற்றிடத்தை ரஜினிகாந்த் நிரப்புவாரா? கமல்-ரஜினி மக்கள் நலனுக்காக இணைவோம் என கூறியிருக்கிறார்களே? என கேள்விகள் முன் வைக்கப்பட்டது.

subramaniyan swamy

Advertisment

அதற்கு பதிலளித்த சுப்பிரமணிய சுவாமி, “சினிமா நடிகர்கள் தமிழ்நாட்டுக்காக ஒன்றும் செய்ய முடியாது. ரஜினியுடைய திரைப்படம் வெளியீடு நெருங்குவதால் விளம்பரத்திற்காக செய்யலாம். "நான் அரசியலுக்கு வருவேன்" என எத்தனை தடவை ரஜினி கூறியிருக்கிறார்? ஆனால், கடைசியில் ஒன்றும் நடக்கவில்லை.” என்றார்.

Advertisment

இறுதியாக, சசிகலா விடுதலை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, “அதைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. அவரை சிறைக்கு அனுப்பியதில் என்னுடைய வழக்கும் இருந்தது. அவரின் தண்டனைக் காலம் முடிவதற்கே இன்னும், ஒரு வருடம் தான் இருக்கிறது. கட்சியை நல்ல அமைப்புடன் நடத்துவதற்கான திறமை சசிகலாவிடம் உள்ளது. சிறையிலிருந்து வெளியே வந்தால் அதிமுகவினர் கட்டாயம் சசிகலா கட்சியில் தான் இணைவார்கள் என நான் எதிர்பார்க்கிறேன்.”

இவ்வாறு சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.