இந்திய விடுதலைப்போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 128வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் அவருக்கு மரியாதை செய்யப்பட்டது. சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் உருவச் சிலைக்கு அமைச்சர்கள் சாமிநாதன், சேகர்பாபு, மா. சுப்பிரமணியம், துணை மேயர் மகேஷ் குமார் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.