ஆதரவற்ற முதியவர்; காப்பகத்திற்கு அனுப்பி வைத்த உதவி ஆய்வாளர்!

sub Inspector rescued a helpless old man and sent him to the Govt Shelter

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கவனிப்பார் இன்றி பல முதியவர்கள் இருந்து வருகின்றனர். இவர்களுக்கு பல்வேறு சமூக ஆர்வலர்களும் நல்லெண்ணம் கொண்டவர்களும் தேடிச் சென்று உணவு வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில், திருக்கோவிலூர் செவலை சாலை பகுதியில் உள்ள கை, கால் செயலிழந்த பாபு என்பவர் சிறிய கொட்டகையில் வாழ்ந்து வந்தார். அவருக்கு பலர் உணவு வழங்கி வந்தனர். இந்த நிலையில் சமூக ஆர்வலர்கள் சிலர் பாபுவை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். இதன் பேரில் சிறிய கொட்டகை அமைத்து அதில் வாழ்ந்து வந்த பாபுவை மீட்ட திருக்கோவிலூர் உதவி ஆய்வாளர் நந்தகோபால் அவருக்குத் தேவையான உடைகளை வாங்கி கொடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்ட அவசர கவனிப்பு மற்றும் மீட்பு மையத்திற்கு அவரை அனுப்பி வைத்தார்.

தொடர்ந்து திருக்கோவிலூர் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைவரையும் இதுபோன்று மீட்டு அனுப்பும் முயற்சியில் ஈடுபட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்து வாரம் திருக்கோவிலூர் நீதிமன்றத்தின் முன்பாக இருந்த இதே போன்று நபர் ஒருவரை நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தலின் பேரில் போலீசார் மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

kallakurichi police
இதையும் படியுங்கள்
Subscribe